Page Loader
அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்
அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்

அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2023
01:50 pm

செய்தி முன்னோட்டம்

வருமானத்திற்கு அதிகமாக, சட்டவிரோதமாக பணம் சேர்க்கும் போது அமலாக்கத்துறையினரின் ரேடாரில் சிக்குவது நிச்சயம். அதன்படி, இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த் என்பவர், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதனை தொடர்ந்து, 10 வருடங்களில் ரூ.1.4 லட்சமாக இருந்த அவரின் சொத்து மதிப்பு, ரூ.2.1 கோடியாக உயர்ந்ததாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து தாக்கல் செய்யபட்ட குற்றப்பத்திரிகையில்,சச்சின் சாவந்த், பிரபல மலையாள நடிகை நவ்யா நாயருடன் நெருங்கி பழகியதாகவும், அவருக்கு தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

card 2

குற்றசாட்டுகளை மறுக்கும் நவ்யா நாயர்

இது குறித்து அமலாக்கத்துறை, லக்னோவில் பணிபுரிந்து வந்த சச்சின் சாவந்த், சுமார் 10 தடவை, நவ்யா நாயரை சந்திக்க கொச்சிக்கு பிறந்துள்ளார் என கூறியுள்ளது. இதனை தொடர்ந்தே அமலாக்கத்துறையினர் நவ்யா நாயரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், நவ்யா நாயர், இந்த குற்றசாட்டுகளை மறுத்துள்ளார். தொடர்ந்து, சச்சின் சாவந்த் தனக்கு நண்பர் மட்டும் தான் என்றும், வேறு எந்த உறவும் தங்களுக்குள் இல்லை என்றும் கூறியிருக்கிறார். விலையுயர்ந்த பரிசுகள் பெற்றதற்கு, தன்னுடைய மகனின் பிறந்தநாளுக்காக அவர் பரிசுகள் தந்தார் என்றுமே, மற்றபடி விலையுயர்ந்த பரிசுகள் எதுவும் அவரிடம் பெறவில்லை என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.