NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
    நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
    1/3
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 07, 2023
    04:12 pm
    நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
    நடிகை குஷ்பு, மருத்துவமனையில் அனுமதி

    நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வரும் காய்ச்சலுக்கு யாரும் விதிவிலக்கில்லை என்பது உறுதியாகி உள்ளது. நடிகை குஷ்பூ, தற்போது, கடுமையான ஃப்ளு பாதிப்புக்கு ஆளானதாகவும், அதனை தொடர்ந்து, தற்போது ஹைதராபாதில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாகவும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடல் மெதுவாகச் சோர்வடையும் போது, அது காய்ச்சலுக்கான அறிகுறிகள். அதனை புறக்கணிக்காதீர்கள். தற்போது படிப்படியாக குணமாகி வருகிறேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    2/3

    மருத்துவமனையில் குஷ்பூ

    Like I was saying, the flu is bad. It has taken its toll on me. Admitted for very high fever, killing body ache and weakness. Fortunately, in good hands at @Apollohyderabad
    Pls do not ignore signs when your body says slow down. On the road to recovery, but long way to go. pic.twitter.com/FtwnS74pko

    — KhushbuSundar (@khushsundar) April 7, 2023
    3/3

    உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் குஷ்பூ

    நடிகை குஷ்பு சமீப காலமாக தன்னுடைய உடல் நலத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். கொரோனா லாக்டௌனின் பொழுது, தீவிர உடற்பயிற்சியில் இறங்கினார். அவருடைய குடும்பத்தினருடைய உந்துதல் தான் காரணம் எனவும், 'அண்ணாத்தே' படத்தின் போதுதான், தன்னுடைய எடையின் மீது கவலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது கூட, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இப்படி சுறுசுறுப்பாக சுற்றிக்கொண்டிருந்த தங்களுடைய பேவரைட் ஹீரோயின், தற்போது மருத்துவமனையில் இருப்பதை பார்த்து, குஷ்புவின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளார். 'Take Care', 'Get Well soon' என பலரும், குஷ்புவின் ட்வீட்டிற்கு பதில் தெரிவித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வைரல் செய்தி
    கோலிவுட்

    வைரல் செய்தி

    AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?! கோலிவுட்
    விஜய் தேவரைக்கொண்டாவுடன் காதலை உறுதி செய்தாரா ரஷ்மிகா? கோலிவுட்
    நடிகர் சுதீப், அரசியலில் இறங்கியதை அடுத்து, அவர் படத்திற்கு தடை கர்நாடகா
    "விரைவில் பிரஷாந்திற்கு இரண்டாவது திருமணம்": மனம் திறந்த தியாகராஜன் கோலிவுட்

    கோலிவுட்

    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு சென்னை
    சென்ற ஆண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல் வைரலாகிறது நடிகர் அஜித்
    மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023