Page Loader
நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள் 
நடிகை காஜல் அகர்வாலின் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2023
09:30 am

செய்தி முன்னோட்டம்

'சித்ரா தேவிப்பிரியா'வாக நம்மை சிரிக்கவைத்தது, 'மகதீரா' படத்தில் இளவரசியாக நம்மை கவர்ந்தது, தற்போது 'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது என ரசிகர்கள் மனதில் பப்ளி கேர்ளாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால். இன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, அவர் நடிப்பில் வெளியான சில முக்கிய வெற்றி படங்களின் பட்டியல் இதோ: பொம்மலாட்டம்: 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. காஜல் அகர்வாலின் அறிமுக படமான இது, பல காரணங்களால் காலம் தாழ்ந்து வெளியானது. திரில்லர் படமான இதில், அர்ஜுன் ஹீரோவாகவும், நானா படேகர், ருக்மிணி விஜயகுமார் ஆகியோர் முக்கியமான காதிபத்திரத்திலும் நடித்திருப்பார்கள். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது.

card 2

'அழகுராஜா' திரைப்படத்தில் 'சித்ரா தேவிப்பிரியா' வேடத்தில் கலக்கிய காஜல்

பழனி: இந்த திரைப்படம் தான் இவரின் அறிமுகப்படமாக முதலில் வெளியானது. முதல் படத்திலேயே, பரத், குஷ்பூ என பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் மகான் அல்ல: காஜல் அகர்வால் திரைப்பயணத்தில் இது மிகப்பெரிய வெற்றி படம். கார்த்திக்கு ஜோடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரில்லர் திரைப்படம். துப்பாக்கி: விஜய் உடன் அவர் முதன்முதலாக இணைந்து நடித்த திரைப்படமான இது. A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாகவும் நீண்ட நாளாக பேச்சு உலவி வருகிறது. அழகுராஜா: காமெடி படமான இந்த திரைப்படத்தில், 'சித்ரா தேவிபிரியா' என்ற கதாபாத்திரத்தில், ஒரு காமெடி வேடத்தில் நடித்திருந்தார் காஜல். இன்றளவும் பலராலும் ரசிக்கப்படும் கதாபாத்திரம் இதுவே.