நடிகை இலியானா கர்ப்பமா? குழப்பத்தில் நெட்டிஸன்கள்
பிரபல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸ், இன்று(ஏப்ரல் 18) தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. இலியானா இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில், 'And So the Adventure Begins' என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு குழந்தையின் ட்ரெஸ்ஸும், அடுத்த புகைப்படத்தில், 'மாமா' என்று அச்சிடப்பட்ட டாலர் ஒன்றையும் பதிவிட்டார். இதன்மூலம், தான் தாய்மை அடைந்திருப்பதை சூசகமாக அறிவித்தார் இலியானா. அவரின் பதிவு, தற்போது நெட்டிஸன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இலியானாவின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. இதனிடையே, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர், செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலை, இலியானா காதலிப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.