த்ரிஷாவின் முன்னாள் காதலரை காதலித்ததை ஒப்புக்கொண்டார் பிந்து மாதவி
கடந்த 2016-ஆம் ஆண்டு, நடிகை த்ரிஷாவிற்கும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் நின்று போனது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. அதன்பின்னர், த்ரிஷா திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மறுபுறம், வருண்மணியன், நடிகை பிந்து மாதவியுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றபோது, நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வைரலாகின. தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை வருண் மணியன் மறுத்து வந்தார். தாங்கள் நண்பர்கள் தான் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் வருண்மணியன், கனிகா குமரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கனிகா குமரன், தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்துகொண்ட விசாகன் வணங்காமுடியின் முதல் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
டேட்டிங் செய்ததை ஒப்புக்கொண்ட பிந்து மாதவி
தெலுங்கில், பிந்து மாதவி ஒரு புதிய சீரிஸில் நடித்து வருகிறார். அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம், வருண் மணியனை காதலித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில்கூறிய பிந்து, "ஆம், நாங்கள் இருவரும் சிறிது காலம் காதலித்தோம். ஆனால் த்ரிஷாவின் திருமணம் நின்ற பிறகுதான் நாங்கள் காதலிக்க தொடங்கினோம். ஊடகங்கள் கூறுவதுபோல, அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனபோது நாங்கள் சந்திக்கவே இல்லை" எனக்கூறினார். தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், தற்போது அவர் தெலுங்கு படவுலகில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். காதலில் நடந்த பிரேக்அப் தான், பிந்து மாதவி தமிழ் சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமா என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.