LOADING...
நடிகர் விஷால் பிறந்தநாளன்று நடைபெற்ற நிச்சயதார்த்தம்; வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்
விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் விஷால் பிறந்தநாளன்று நடைபெற்ற நிச்சயதார்த்தம்; வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 29, 2025
12:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வு, இன்று அவரது பிறந்த நாளையொட்டி, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ புகைப்படங்களை தற்போது விஷால் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு சினிமா விழாவில், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளும் திட்டம் குறித்து நடிகர் விஷால் நேரில் அறிவித்திருந்தார். மேலும், நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, அதே இடத்தில் தனது பிறந்தநாளில் திருமணம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். ஆனால், நடிகர் சங்க கட்டடம் இன்னும் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில், விஷாலின் பிறந்த நாளான இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post