
காமெடியனாக அறிமுகம் ஆகி, ஹீரோவாக கெத்து காட்டும் நடிகர்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில், இந்த வேடத்திற்கு இவர் தான் என எப்போதும் முத்திரை குத்திவிட முடியாது. காலத்திற்கும், கதைக்கும் ஏற்ப, சில நேரங்களில், தயாரிப்பாளர்கள் நடிகர்கள் ஆவதுண்டு. இயக்குனர்கள், ஹீரோ அவதாரம் எடுப்பதுண்டு.
அது போல, காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் கதையின் நாயகனாக மாஸ் கட்டிய ஹீரோக்களின் பட்டியல்:
நாகேஷ்: பழம் பெரும் நடிகரான நாகேஷ், தன்னுடைய வித்தியாசமான உடல் மொழி மூலம், ரசிகர்களை கவர்ந்தவர். உடல் மொழி மூலமே சிரிப்பை வரவழைக்கலாம் என்று உலகிற்கு எடுத்து காட்டியவர். நகைச்சுவை நடிகராக இருந்த இவர், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இவரை பார்த்தாலே சிரிக்க தோன்றும் என்ற பேச்சு மாறி, இவரின் நடிப்பின் மூலம் அனைவரையும் கலங்க வைத்திருப்பார்.
தமிழ் திரைப்படங்கள்
வடிவேலு முதல் சூரி வரை
வடிவேலு: காமெடி என்றால், இவர் இல்லாமல் பட்டியலே இல்லை. 'இம்சை அரசன் புலிகேசி' முதல், 'நாய் சேகர்' வரை, வைகை புயலுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு.
அப்புகுட்டி: திரைப்படங்களில் சின்ன காமெடி வேடங்களில் நடித்தவர், 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் மூலம் ஹீரோவாக உருமாறினார்.
யோகி பாபு: தனது வித்தியாசமான கூந்தலாலும், உடல் மொழியாலும், திரைப்படங்களில் தோன்றிய யோகி பாபு, 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் கதாநாயகனாக ப்ரோமோஷன் பெற்றார். இவர் நடித்த 'மண்டேலா' திரைப்படம் தேசியவிருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம்: தமிழ் ஹீரோக்களின் நண்பனாக, காமெடிகளில் கலக்கியவர் சந்தானம். தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
சூரி: இந்த பட்டியலில் லேட்டஸ்ட் இணைப்பு சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.