NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட்
    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்

    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 08, 2024
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சங்க கூட்டத்திற்குப் பிறகு பேசிய நடிகர் கார்த்தி, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க நடிகர் விஷால் சைக்கிளில் வந்தது பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

    நடிகர் சங்கத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், அதைத் தொய்வின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கலை நிகழ்ச்சி

    நிதி திரட்ட கலை நிகழ்ச்சி நடத்த முடிவு

    நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி முடிக்க வாங்கப்பட்ட கடனை செலுத்துவதற்காக கலை நிகழ்ச்சியை நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இதில் அனைத்து முக்கிய நட்சத்திரங்களையும் கண்டிப்பாக கலந்துகொள்ள வைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து ஒரு டிராமா நிகழ்ச்சியில் பங்கேற்க ஒத்துக் கொண்டுள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.

    நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் இந்தியில் 16 படங்களில் நடித்துள்ள நிலையில், கடைசியாக 1982இல் கே.பாலச்சந்தர் இயக்கிய அக்னி சாட்சி படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    அதன் பிறகு 42 வருடங்களாக இருவரும் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது கலை நிகழ்ச்சிக்காக இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    கமல்ஹாசன்
    கோலிவுட்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ரஜினிகாந்த்

    பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ் ஏ ஆர் முருகதாஸ்
    அம்பானி இல்ல திருமண விழாவில் மனைவி மற்றும் மகளுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு முகேஷ் அம்பானி
    கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்கு செல்கிறார் சூப்பர்ஸ்டார்; விஜய் தங்கும் அதே ஹோட்டலில் தங்கவுள்ளார் கேரளா
    ரஜினி ஃபேன்ஸ், 'தலைவர் 171' படத்தின் அப்டேட் வெளியானது லோகேஷ் கனகராஜ்

    கமல்ஹாசன்

    கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு இந்தியன் 2
    துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்! அமிதாப் பச்சன்
    தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது! சிலம்பரசன்
    இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  ஷங்கர்

    கோலிவுட்

    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம் நடிகர் விஜய்
    வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட் ரஜினிகாந்த்
    கொட்டுக்காளி, வாழைக்கு போட்டியாக ராயன், கல்கி 2898AD; இந்த வார ஓடிடி அப்டேட் ஓடிடி
    ராயன் பட வெற்றியால் நடிகர் தனுஷுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025