LOADING...
அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு
தி கோட் படத்தின் வெற்றிக்கு நடிகர் விஷால் வாழ்த்து

அபிமான நடிகர் தளபதிக்கு வாழ்த்துக்கள்; தி கோட் படம் குறித்த நடிகர் விஷாலின் எக்ஸ் பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2024
05:04 pm

செய்தி முன்னோட்டம்

தி கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிளாக்பஸ்டர் வெற்றிக்காக ஏஜிஎஸ் புரடக்ஷன் மற்றும் அர்ச்சனா கல்பாத்திக்கு வாழ்த்துக்கள். தி கோட்டின் ஒட்டுமொத்த குழுவிற்கும், எனது அபிமான நடிகர் தளபதி விஜய் மற்றும் என் அன்பு சகோதரன் வெங்கட் பிரபு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்." எனத் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த் போன்ற மூத்த நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல நட்சத்திரங்களின் கேமியோக்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஷால் வாழ்த்து