NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் சென்ற விஷால்; வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் சென்ற விஷால்; வைரலாகும் வீடியோ
    நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் சென்ற விஷால்

    நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் சென்ற விஷால்; வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 08, 2024
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சங்க கூட்டத்திற்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    நடிகர் விஷால் 2026 சட்டசபைத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்பு நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததை போன்று, தற்போது நடிகர் விஷால் நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

    இதைப் பார்த்த பலரும் விஷால் சைக்கிளில் சென்றதில் என்ன தவறு எனக் கேட்டாலும், விஷாலின் செயலை சிலர் கலாய்த்து வருகின்றனர்.

    இதற்கிடையே, விஷால் சைக்கிளில் செல்லும்போது பின்னே வந்த அரசு பேருந்துக்கு செல்வதற்கு இடம் தரவில்லை என ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

    அதே நேரம் பேருந்து ஹாரன் அடித்ததும் வழிவிட்டு விலகினார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    விஷால் சைக்கிளில் சென்ற வீடியோ

    குட்டி பகவதி அலம்பல் தாங்க முடியலப்பா.. விஜய்யின் Copy, Paste லொள்ளுகள்.. ஆழ்மனதில் தளபதியாக வாழ்ந்து
    கொண்டிருக்கும் விஷால்..? நடிகர் சங்க கூட்டத்திற்கு பெடல்
    போட்டு வந்து அலப்பறை!#Vishal #ActorVishal #NadigarSangam #NadigarSangamMeeting #Vijay #Thalapathyvijay #NewsTamil24x7 pic.twitter.com/4ZBe7oBmqn

    — News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 8, 2024

    நடிகர் சங்க கூட்டம்

    நடிகர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

    நடிகர் சங்க கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்றது.

    இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அதன்படி, நடிகர் சங்கத்தில் தற்போது பொறுப்பாளர்களாக உள்ளவர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், அதை தொய்வின்றி நடத்தி முடித்திட ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட கடனை அடைப்பதற்காக நட்சத்திர கலைவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பாலியல் புகாரில் சிக்கும் நபர்களுக்கு சினிமா துறையில் பணியாற்ற தடை விதிக்கவும் இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஷால்
    நடிகர் சங்கம்
    சினிமா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  திருமணங்கள்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா

    நடிகர் சங்கம்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால் விஷால்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  சிலம்பரசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    சினிமா

    மாரி செல்வராஜ் நமக்கு கிடைச்ச பொக்கிஷம்; இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு இயக்குநர் பாரதிராஜா
    வாழை vs கொட்டுக்காளி: முதல்நாள் வசூல் ரீதியாக எந்த படம் பெஸ்ட்? கோலிவுட்
    பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் வாழை; நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு சிவகார்த்திகேயன்
    'The GOAT' : எக்ஸ் தளத்தில் வைரலாகும் தளபதி விஜயின் GOAT புகைப்படங்கள் நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025