Page Loader
நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல்
நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்!

நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2025
05:01 pm

செய்தி முன்னோட்டம்

47 வயதான நடிகர் விஷாலின் திருமணத் திட்டங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பல வதந்திகள் வந்துள்ளன. அவரோ நடிகர் சங்கத்தின் கட்டட பணிகள் நிறைவடைந்த பின்னரே திருமணம் என சபதம் எடுத்ததாக கூறி வந்த நிலையில், தற்போது கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுகுறித்து ஒரு மேடையில் பேசிய அவர், நடிகர் சங்க கட்டடத்தில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் எனவும், நிச்சயம் அது காதல் திருமணம் தான் எனவும், இது குறித்து விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்ற செய்தி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விஷால்- சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிவிப்பு

விரைவில் இது குறித்து விஷால் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் படி, விஷாலுக்கு நெருக்கமான வட்டாரங்கள், சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யப்போவதாக வெளியான செய்தி உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தின. உண்மையில், இன்று திங்கட்கிழமை மாலையில் நடைபெறும் சாய் தன்ஷிகா நடிக்கும் யோகி டா திரைப்பட விழாவிற்கு கலந்துகொள்ளவரும் சிறப்பு விருந்தினர்களின் விஷால் ஒருவர். இந்த யோகி டா நிகழ்வில் அவர் திருமண அறிவிப்பை வெளியிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நட்சத்திர ஜோடி, சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும், அன்றிலிருந்து அவர்களது நட்பு வளர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு திருமணம் நடைபெறும் என்று விஷால் ஊடகங்களுக்குத் தெரிவித்ததால், நிச்சயதார்த்தம் விரைவில் நடக்க வாய்ப்புள்ளது.