
"அண்ணே.. என்னை மன்னிச்சிடுங்க"- விஜயகாந்த் மறைவிற்கு விஷால் கண்ணீர் மல்க இரங்கல்
செய்தி முன்னோட்டம்
நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் விஷால் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் விஷால் தற்போது நியூ யார்க் நகரத்தில் உள்ளார். அவரது இரங்கல் செய்தியை காணொலி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "கேப்டன் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அண்ணே.. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் காலை தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டும். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் எங்களைப் போன்ற ஆட்கள் நல்லது செய்வது சாதாரணம் அல்ல. உங்களிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டேன். உங்கள் அலுவலகத்துக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள்".
card 2
"என்னால் ஜீரணிக்க முடியவில்லை": விஷால்
"ஒரு அரசியல்வாதி, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகியோ என்பதை விட ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மனிதராக பேர் வாங்குவது சுலபம் அல்ல. சிலருக்கு மட்டுமே அந்த பேர் நீடிக்கும். என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணே. சத்தியமாக சொல்கிறேன். நான் உங்களுடன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என கண்ணீருடன் பேசியுள்ளார் விஷால்.
நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருந்தபோது, பல கோடி ரூபாய் கடனை அடைத்தார். அந்த செயல் தற்போது வரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
முதல்முறையாக, கோலிவுட்டின் நடிகர்களை ஒருங்கிணைத்து வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழா ஏற்பாடு செய்து, அதன் மூலம் நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார் எனவும் கூறப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
விஷால் கண்ணீர் மல்க இரங்கல்
I have nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and… pic.twitter.com/pMYAblLOdV
— Vishal (@VishalKOfficial) December 28, 2023