தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி விருந்து வைத்த விஷால்
செய்தி முன்னோட்டம்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் நிலையில், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்மூருமாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஷாலின் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் திருச்சியில் படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு படத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு, நடிகர் விஷால் சமபந்தி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இவ்விருந்தில், ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் உணவருந்தினர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஊழியர்களுக்கு கறி விருந்து போட்டு கலக்கிய விஷால்
ஹரி இயக்கத்தில் @VishalKOfficial நடிக்கும் #Vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் சூழ்நிலையில், திபாவளி தினமான இன்றும் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், படப்பிடிப்பில் பணியாற்றும் அனைவருக்கும் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. #Vishal pic.twitter.com/ciBh0OnLpS
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 12, 2023