Page Loader
முதல்வருக்கு சிகாகோவில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது; எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி பதிவு
முதல்வருக்கு சிகாகோவில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய விஜய் சேதுபதி

முதல்வருக்கு சிகாகோவில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது; எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 09, 2024
06:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். முதலில் சான் பிரான்சிஸ்கோ சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார். சிகாகோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபின், அமெரிக்க வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர், 'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' என எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது." என நடிகர் விஜய் சேதுபதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

விஜய் சேதுபதியின் எக்ஸ் பதிவு