நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் பாடல் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், இன்று(ஜூன்.,22)விஜய் பிறந்தநாளினை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இடம்பெறும் 'நா ரெடி' என்னும் பாடலினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இப்பாடலினை நடிகர் விஜய், அசல் கோளாறு மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். விஷ்ணு எடவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தற்போது இப்பாடலினை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.