Page Loader
தூத்துக்குடியில் நடிகர் விஜய்: நிவாரணம் வழங்கும் போது பதிவு செய்யப்பட்ட சுவாரஸ்யமான வீடியோக்கள் 

தூத்துக்குடியில் நடிகர் விஜய்: நிவாரணம் வழங்கும் போது பதிவு செய்யப்பட்ட சுவாரஸ்யமான வீடியோக்கள் 

எழுதியவர் Sindhuja SM
Dec 30, 2023
05:30 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின. அந்த பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதற்குள் டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. நெல்லையில் மற்றும் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் நுழைந்தது. இதனால், பலர் வீடுகளை இழந்தனர். பொது சொத்துக்களும் கடுமையாக சேதமடைந்தது. அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இன்று நடிகர் விஜய் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். அவரது இந்த பயணத்தின் போது எடுக்கட்ட சுவாரஸ்யமான வீடியோக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுத்த ரசிகை 

ட்விட்டர் அஞ்சல்

'நிவாரணம் வேண்டாம் போட்டோ மட்டும் போதும்'

ட்விட்டர் அஞ்சல்

மக்களுடன் ஒரு செல்ஃபி 

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஜய்யை காணாமல் தேடிய பாட்டி

ட்விட்டர் அஞ்சல்

விஜய்யை பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த பெண்