அதிக வரி செலுத்தும் பிரபலங்கள்; இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய நடிகர் விஜய்
2024ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் வகிக்கிறார். இந்த பட்டியலில் சல்மான் கான், அமிதாப் பச்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போன்ற பிற முக்கிய நபர்களை விஞ்சி, நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஃபார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஷாருக்கான் நிதியாண்டு 2023-24க்கு ரூ.92 கோடி வரி செலுத்தினார். நடிகர் விஜய் ரூ.80 கோடியும், சல்மான் கான் ரூ.75 கோடியும் கொடுத்தனர். மூத்த நடிகர் அமிதாப் பச்சன் ரூ.71 கோடி வரி செலுத்தி நான்காவது இடத்திலும், ரூ.66 கோடி செலுத்தி விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலில் எம்எஸ் தோனி
ஃபார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அஜய் தேவ்கன் ரூ.42 கோடியுடன் ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ரூ.38 கோடியுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். ரன்பீர் கபூர் ரூ.36 கோடியுடன் எட்டாவது இடத்திலும், ஹிருத்திக் ரோஷன், சச்சின் டெண்டுல்கர் தலா ரூ.28 கோடியுடன் ஒன்பதாவது இடத்திலும், கபில் சர்மா ரூ.26 கோடியுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் சவுரவ் கங்குலி (ரூ. 23 கோடி), கரீனா கபூர் (ரூ. 20 கோடி), ஷாஹித் கபூர் (ரூ. 14 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ. 13 கோடி), மற்றும் கியாரா அத்வானி (12 கோடி) உள்ளனர்.