Page Loader
ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி, உண்மையில் யார் தெரியுமா?
ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி

ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி, உண்மையில் யார் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2023
05:20 pm

செய்தி முன்னோட்டம்

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இருப்பினும், குறிப்பாக ரஜினிகாந்த்தின் மகனாக நடித்திருந்த வசந்த் ரவி பற்றி பலரும் அறிந்திராத ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட பிரபல உணவகங்களில் ஒன்று தான் 'நம்ம வீடு வசந்த பவன்'. இந்த உணவகங்களின் உரிமையாளர், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன். அவரின் புதல்வர் தான் நடிகர் வசந்த் ரவி.

card 2

லண்டனில் மருத்துவ படிப்பை முடித்தவர் வசந்த் ரவி 

நடிகர் ஆகும் முன்னர், லண்டனில், மருத்துவம் சார்ந்த மேலாண்மை படிப்பை முடித்துள்ளார் வசந்த் ரவி. படிப்பு முடிந்த சில காலம் வரை, இங்கிலாந்தில் பணி புரிந்துள்ளார் எனக்கூறப்படுகிறது. இருப்பினும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், இந்தியா வந்து விட்டார் எனவும் கூறப்படுகிறது. வசந்த் ரவியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் ராம். இவரின் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படத்தில் நடித்தமைக்கு, வசந்த் ரவிக்கு பல விருதுகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து, ராக்கி என்ற படமும், அஸ்வின்ஸ் என்ற திகில் படமும் நடித்துள்ளார் இவர். ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து, படத்தின் போக்கையே மாற்றிவிட்டார் வசந்த் ரவி.