
ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். என்பவரதுஇயக்கத்தில் 'ரிபெல்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
டீசர் பதிவு
Unleashing the #Rebel All the best @gvprakash & team!!#RebelTeaser https://t.co/wyK1vFFpEh@StudioGreen2 @GnanavelrajaKe pic.twitter.com/CfxHmYRG0m
— Suriya Sivakumar (@Suriya_offl) November 11, 2023