Page Loader
நடிகர் சூர்யாவின் பிறந்ததினம்: 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யாவின் பிறந்ததினம்: 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

எழுதியவர் Sindhuja SM
Jul 23, 2023
05:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 48வது பிறந்ததினத்தை இன்று(ஜூலை 23) கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, அவர் தற்போது நடித்து வரும் பிரமாண்டமான 'கங்குவா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு 12.01க்கு இணையத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை, வீரம், விஸ்வாசம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய 'சிறுத்தை' சிவா இயக்கி வருகிறார். நடிகை திஷா பதானி, கோவை சரளா, நடிகர் யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி இருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

வெளியிடப்பட்டிருக்கும் 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்