வாக்காளர் பெயர் பட்டியலில் மாயமான நடிகர் சூரியின் பெயர்
நடிகர் சூரி இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் அவரால் வாக்களிக்க இயலவில்லை. இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், "என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றவே வாக்களிக்க வந்தேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் வாக்களித்து வருகிறேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போய் விட்டதாக கூறுகிறார்கள். என் மனைவியின் பெயர் மட்டும் உள்ளது. அவர் மட்டும் வாக்களித்துள்ளார். ஓட்டு போட வந்து, ஓட்டுப்போடாமல் செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. எனினும் அனைவரும் தங்களின் ஓட்டை 100 சதவீதம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மாயமான நடிகர் சூரியின் பெயர்!
#Watch | வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என வீடியோ வெளியிட்டு நடிகர் சூரி வேதனை!#SunNews | #Soori | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024 | @sooriofficial | @TNelectionsCEO pic.twitter.com/oORWTD9cBS— Sun News (@sunnewstamil) April 19, 2024