நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி, கோலிவுட்டில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தேடப்படும் நடிகராக வளர்ந்துள்ளார். பல நடிகர்கள் அவருடன் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவரின் திரை ஆளுமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் வெளியான 'மாவீரன்' திரைப்படத்தில், வாய்ஸ்-ஓவர் கொடுத்திருந்தார். இந்த விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முன்னணி நடிகராக இருக்கும் ஒரு நடிகர், சக நடிகருக்காக, திரையில் தோன்றாமல், வெறும் குரலை மட்டும் தந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என கூறினர். மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், "விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும்" எனக்கூறினார்.