
ரசிகர்களுக்கு வீட்டில் பிரியாணி விருந்து வைத்த சிம்பு - வைரல் வீடியோ!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் முன்னணி நடிகரான சிலம்பரசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து பரிமாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மீது அன்பு கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு. ரசிகர்களால் தான் நான் என எல்லா மேடைகளிலும் புகழ்ந்து பேசி வருபவர்.
இதனிடையே, சமீபத்தில் பத்து தல படம் திரையரங்கில் வெளியாகி அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.
இந்நிலையில், சிம்பு சென்னையில் ரசிகர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு வீட்டிலேயே பிரியாணி விருந்து வைத்து பரிமாறியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய #Atman ❤@SilambarasanTR_ #Silambarasan #SilambarasanTR #STR #Simbu #PathuThala #STR48 #Galatta pic.twitter.com/I5aztWjLdC
— Galatta Media (@galattadotcom) April 18, 2023