'அயலான்' ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் 'அயலான்'. இந்த படத்தின் படப்பிடிப்பும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த திரைப்படம் பல தடங்கல்களை தாண்டி, நேற்று வெளியானது. இப்படம் குறித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் திரைப்படம் பரவலாக குழந்தைகளுக்கு பிடிக்கும். அந்த வகையில் சயின்ஸ் பிக்க்ஷன் படமான இந்த 'அயலான்'-ம் குழந்தைகளை கவர்ந்துள்ளது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
சம்பளத்தை தியாகம் செய்த சித்தார்த்
இப்படத்தில், சரத் கேல்கர், ஆயிஷா கொப்பிகர், பானு பிரியா மற்றும் யோகி பாபு ஆகியோரை தாண்டி, ஒரு ஏலியனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இந்த ஏலியனுக்கு குரல் கொடுத்திருப்பது பிரபல நடிகர் சித்தார்த் ஆவர். அயலான் படம் பைனான்ஸ் பிரச்சனையால் வெளியிடுவதில் சிரமம் இருந்தது என்றும், CG மற்றும் கிராஃபிக்ஸ் செலவு படத்தின் பட்ஜெட்டை தாண்டி சென்றதாகவும் கூறப்பட்டது. தயாரிப்பாளரின் சிரமத்தை குறைக்க, இதற்காக சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்கவில்லை என்றும் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார் இந்நிலையில், டப்பிங் செய்ததற்காக நடிகர் சித்தார்த்தும் படத்திற்காக சம்பளமே வாங்கவில்லையாம். இப்படி பலரும் தியாகம் செய்து, இந்த படத்தை வெளியிட்டுள்ளனர் என்ற தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.