ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்? பதில் கூறிய நடிகர் சித்தார்த்!
ஒரு நேர்காணலின் போது நடிகர் சித்தார்த், தான் ஆக்டிவாக இருந்த ட்விட்டரில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நேர்காணலில் "சமூக ஆர்வலர் என்பது மிகவும் வேடிக்கையான வார்த்தை, ஆனால் நான் எப்போதும் உண்மையைப் பேசுகிறேன், அதுதான் நான். ஒரு நடிகராக, நான் இத்தனை ஆண்டுகளாக அதைச் செய்து வருகிறேன். ஆனால் எனது தோழர்கள் என்னுடன் இல்லை" என்று தெரிவித்தார். மேலும் உலகில் நடக்கும் தீமைகளை சரி செய்ய நான் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை. பிரச்சனையில் சிக்கினாலும் உடனிருக்க யாருமில்லை. எனக்கு இந்த பிரச்சனை வேண்டாம்" என்று இது குறித்து தெரிவித்தார்.
சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு பதிலளித்த சித்தார்த்
கடந்த ஆண்டு, பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு, பதிலளித்த சித்தார்த் பின்னடைவை எதிர்கொண்டார். சாய்னாவின் ட்வீட்டுக்கு அவர் பதிலளித்ததைத் தொடர்ந்து, வெளியான எதிர்மறை விமர்சனங்களினால் சித்தார்த் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து சித்தார்த் தனது ட்விட்டர் கணக்கை 2022 இல் செயலிழக்கச் செய்தார். இது குறித்து இதுவரை மௌனம் காத்துவந்த சித்தார்த், தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார். இந்நிலையில், சித்தார்த்தின் டக்கர் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த், வாழ்க்கையில் எளிய வழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் உள்ளூர் ரவுடியின் மகனாக நடித்துள்ளார்.