
அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்- படக்குழு வெளியிட்ட அப்டேட்
செய்தி முன்னோட்டம்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகிறது.
தமிழில் முதல் ஏலியன் தொடர்பான படத்தில், ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் வழங்கியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் டீசரிலில் சித்தார்த் குரல் இருந்ததை ரசிகர்கள் யூகித்திருந்த நிலையில், தற்போது படக்குழு அதை உறுதி செய்துள்ளது.
24AM ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முன்னதாக படம் தீபாவளிக்கு வெளிவர இருந்த நிலையில், ஏலியன் தொடர்பான விஎப்எக்ஸ் பணிகள் முடிவடையாததால், படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் மீது, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஏலியனுக்கு குரல் கொடுத்த சித்தார்த்
Here we go✨ Unveiling you the voice of cute cosmic friend: Actor #Siddharth🎙️
— Ramesh Bala (@rameshlaus) December 13, 2023
Who guessed it right?
Get ready for more updates from #Ayalaan#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan @arrahman @Ravikumar_Dir @kjr_studios… pic.twitter.com/UCYNCOTeIk