
"இதுவரைக்கும் அது போன்ற படங்கள் பண்ணல.. ": டக்கர் படம் குறித்து நடிகர் சித்தார்த் பெருமிதம்
செய்தி முன்னோட்டம்
'பாய்ஸ்' திரைப்படம் மூலம் 'சாக்லேட் பாய்' என பெண்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் சித்தார்த்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து ஹிட் படங்களை தந்தவர், இடையில் படத்தில் நடிப்பதிலிருந்து சிறிது இடைவேளை எடுத்தார்.
அதற்கு காரணம் தெரியாவிட்டாலும், தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்தியன் 2 , டெஸ்ட், சித்தா என பல படங்கள் வரிசையாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள டக்கர் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நிகழ்ந்தது.
அதில் பேசிய சித்தார்த், "இந்த டக்கர் திரைப்படம் விறுவிறுப்பாக எந்த இடத்திலும் நிக்காத ஸ்பீடான படம். ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் இடையேயான மோதலை பேசும் படமாக டக்கர் திரைப்படம் உருவாகியுள்ளது" என குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"சித்தார்த் காட்டுல மழை "கண்டிப்பா டக்கர் ஹிட் ஆகும் - சித்தார்த் உறுதி https://t.co/wupaoCzH82 | #actor #Siddharth #Takkar #Cinema pic.twitter.com/L4tR88HgY1
— ABP Nadu (@abpnadu) May 31, 2023