
நடிகர் ஸ்ரீ பற்றி வெளியான முக்கிய அறிக்கை; இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்
செய்தி முன்னோட்டம்
மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவுகளின் படி, அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக நண்பர்களும், உறவினர்களும் கூறினர்.
இந்த நிலையில் தற்போது அவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் ஸ்ரீயின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையை மாநகரம் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், ஸ்ரீ பற்றி யாரும் தவறான கருத்துகளை பகிர வேண்டாம் எனவும், அவருடைய தனியுரிமைக்கு மரியாதை தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழில்
சின்னத்திரையிலிருந்து பயணத்தை தொடங்கிய ஸ்ரீ
ஸ்ரீ தனது பயணத்தை விஜய் தொலைக்காட்சித் தொடரான 'கனா காணும் காலங்கள்' மூலம் தொடங்கினார்.
பின்னர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (2012) இல் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.
அவரது யதார்த்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது மற்றும் வழக்கு எண் 18/9 படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது.
அவரது அடுத்த பெரிய படம் லோகேஷ் கனகராஜின் அறிமுக படமான மாநகரம் (2017). பின்னர் அவர் பிக் பாஸ் தமிழ் 1 இல் தோன்றினார்.
இருப்பினும், நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியேறினார்.
இதுதவிர அவர் ஓநாயும் ஆடுகுட்டியும், சோன் பப்டி, வில் அம்பு மற்றும் இறுகப்பற்று போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.