அடுத்த செய்திக் கட்டுரை
அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்
எழுதியவர்
Venkatalakshmi V
Jun 07, 2023
07:08 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் தான்.
45 வயதை கடந்த நடிகர் ரிச்சர்ட்டுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், ரிச்சர்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து இருவருக்கும் காதல் என செய்திகள் கசிய ஆரம்பித்தது. இந்நிலையில், அந்த புகைப்படங்கள் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், படத்தின் ப்ரோமோஷனுக்காகவே தான் அதை பதிவேற்றியதாகவும் ரிச்சர்ட் ரிஷி கூறியுள்ளார்.
இதை கேள்விப்பட்டதும், "படத்துக்காக இப்படி எல்லாமா வித்தை காட்டுவாங்க?!!" என ரசிகர்கள் நொந்து கொண்டனர்.