LOADING...
ரவி மோகன்-SJ சூர்யா- கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'ப்ரோ கோட்'
ரவி கதாநாயனாகனாக நடிக்க, SJ.சூர்யா முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

ரவி மோகன்-SJ சூர்யா- கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'ப்ரோ கோட்'

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2025
02:50 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரவிமோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் ரவி கதாநாயனாகனாக நடிக்க, SJ.சூர்யா முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திங்களன்று, படத்தின் பெயரை 'ப்ரோ கோட்' என வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள். வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். 'ப்ரோ கோட்' திரைப்படம் ரவி மோகனுடன் அவர் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். கதைக்களம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படம் ஒரு அதிரடி நகைச்சுவை படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மற்ற வெளியீடுகள்

ரவியின் அடுத்தடுத்த வெளியீடுகள்

கடைசியாக, 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தில் நடித்திருந்த ரவி மோகன், அடுத்ததாக, கணேஷ் கே பாபு இயக்கும் கரத்தே பாபு படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். இதோடு, சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர்களுடன் அதர்வாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, அர்ஜுனன் ஜூனியரின் ஜெனி மற்றும் தனி ஒருவன் 2 படங்களும் அடுத்தது தயாரிப்பில் உள்ளன. மறுபுறம், எஸ்.ஜே. சூர்யாவிற்க்கோ, லவ் இன்சூரன்ஸ் கொம்பனி, சர்தார் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவரும் கடைசியாக வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.