Page Loader
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து 

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து 

எழுதியவர் Sindhuja SM
Jan 01, 2024
12:46 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு முதல் தனது போயஸ் கார்டன் வீட்டில் கூடியிருந்த ரசிகர்களுக்கு, இன்று காலை கை அசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். 'ஜெய் பீம்' திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தன் வீட்டிற்கு முன் கூடி இருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து