
ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ம்தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
இப்படம் வெளியாகி தற்போது மிகப்பெரிய ஹிட்'ஆகியுள்ள நிலையில், இப்படம் ரிலீசிற்கு முன்னரே ரஜினிகாந்த், 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் ரிஷிகேஷ், துவாரகா, பாபாஜி குகை, பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருந்தார்.
ரிஷிகேஷில் சுவாமி.,தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று ரிஷிகளை சந்தித்துள்ளார்.
அதன்பின்னர் உத்தரகாண்ட்டில், வியாசர் குகைக்கு சென்று தரிசனம் மேற்கொண்ட ரஜினி, பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்ற ரஜினி, அங்கு யோகதா சத்சங் தலைமையகத்திற்கு சென்று சன்னியாசிகளை சந்தித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஜார்கண்ட் மாநிலத்தில் நடிகர் ரஜினிகாந்த்
#அரசியல்Clicks | ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!#SunNews | #Rajinikanth | #CPRadhakrishnan | @rajinikanth pic.twitter.com/IfN9p3mHQU
— Sun News (@sunnewstamil) August 17, 2023