
"இனி என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு" - விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ்
செய்தி முன்னோட்டம்
மறைந்த நடிகர் விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் புகழ், இன்று விஜயகாந்த் வழியிலே, தானும் பசி என வருபவர்களுக்கு உணவளிக்க இருப்பதாக அறிவித்தார்.
"பசி என வருபவர்கள் யாராக இருந்தாலும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகம் வாருங்கள். தினமும் மதிய உணவு போடுகிறேன். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் இதை செய்யப் போகிறேன்" என கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் புகழ்.
அவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் காமெடி நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தின் நினைவிடமான தேமுதிக அலுவலகத்திற்கு பல பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் புகழ் அறிவிப்பு
நானும் இனிமே என்னோட ஆபிஸ்ல மதிய சாப்பாடு போடப்போறேன் - நடிகர் புகழ்!#Vijayakanth | #Captainvijayakanth | #Pugazh pic.twitter.com/JL4W0BV4MJ
— IBC Tamil (@ibctamilmedia) January 5, 2024