Page Loader
முதல் மனைவி பிரிய காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகர் பப்லு
முதல் மனைவி விவாகரத்துக்கான காரணத்தை உடைத்த பப்லு

முதல் மனைவி பிரிய காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகர் பப்லு

எழுதியவர் Siranjeevi
Apr 13, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட், பாலிவுட், கன்னட என பல மொழிப் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ். இவர், தற்போது சன் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 56 வயதுடைய பிரித்விராஜ் அண்மை காலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே பினா என்ற பெண்ணுடன் திருமணமாகி விவாகரத்து பெற்ற பப்லுவிற்கு அஹத் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், அண்மையில் இரண்டாவதாக 23 வயதுடைய மலேசிய பெண்ணை திருமணம் செய்தார். இதற்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன. தற்போது நடிகர் பிரித்வி, தனது முதல் மனைவி விவாகரத்துக்கான காரணத்தையும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பப்லு வேதனை

முதல் மனைவியின் பிரிவுக்கான காரணத்தை உடைத்த நடிகர் பப்லு

அதில், ஆரம்பத்தில் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தோம். அதன் பின் பிரச்சினைகள் எழுந்தது. என்னை சாப்பிட்டாயா என ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டார். நிகழ்ச்சிக்கு செல்லும் போது இந்த உடை நல்லா இருக்கா என கேட்டதற்கு நல்லாவே இல்லை என அசிங்கப்படுத்துவார். தொடர்ந்து, ஒரு நிகழ்ச்சியில் உங்கள் கணவர் அழகாக உள்ளார் என கேட்டதற்கு மனைவி யாரு இவனா? என பேசியது என்னை காயப்படுத்தியது. மேலும் அவர் எனக்கு கணவன் என்ற மரியாதை கொஞ்சம் கூட கொடுத்ததே இல்லை என நடிகர் பப்லு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.