Page Loader
விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - ஆதரவு தெரிவிக்கும் நடிகர் பிரபு 
விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - ஆதரவு தெரிவிக்கும் நடிகர் பிரபு

விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - ஆதரவு தெரிவிக்கும் நடிகர் பிரபு 

எழுதியவர் Nivetha P
Aug 03, 2023
06:44 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் சமீபத்தில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களை அழைத்து ஊக்கத்தொகையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதனை ஏற்பாடு செய்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் அவர் அரசியலுக்கு வர போகிறார் என்று கூறப்படுகிறது. இவரின் அரசியல் வருகை குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை கூறிவரும் நிலையில் நடிகர் பிரபு, "அரசியலுக்கு வந்தால் சந்தோசம். இளம் ரத்தம் அரசியலுக்கு வந்தால் நல்லது தான். நான் வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஜய் குறித்து பிரபு