
லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்
செய்தி முன்னோட்டம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில், ஏற்கனவே பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது.
இவர்களுடன் தற்போது மற்றுமொரு பிரபலம் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆம், நடிகர் நாசரின் சகோதரரும், நடிகருமான ஜவஹர் என்பவரும் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே 'ஜி வி 2' , 'பனிவிழும் மலர்வனம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து அவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. "நான் என்ன கதாபாத்திரம் பண்ணினேன்னு சொல்லக்கூடாது. இப்படத்துக்காக காஷ்மீர்ல் 40 நாட்கள் இருந்தேன். எனது போர்ஷன் 15 நாட்கள் படமாக்கப்பட்டது" என அவர் கூறியுள்ளார்.
card 2
லியோ பட நட்சத்திர பட்டாளத்தில் இணையும் ஜவஹர்
லியோ படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், அர்ஜுன் தாஸ் என பல வில்லன் நடிகர்கள் இருக்க தற்போது நாசரின் தம்பியும் அதில் இணைந்துள்ளார்.
ஜவஹர் சில ஆண்டுகளுக்கு முன்னர், நாசரை பற்றியும், அவரின் மனைவி கமீலா பற்றியும் பேட்டி கொடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதில், நடிகர் நாசர், தனது பெற்றோர்களை கவனிப்பது இல்லை எனவும், கமீலா, நாசரை அவர் குடும்பத்தினரிடம் இருந்து பிரித்து விட்டார் எனவும் கூறினார்.
அதன் பிறகு, அவர் ஒரு சில படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். பார்ப்பதற்கு அச்சுஅசல் நாசரை போலவே இருக்கும் ஜவஹர், அண்ணனை போல வில்லன் கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிக்க போவதில்லை எனவும், கிடைக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.