நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் - வீடியோ பதிவு
பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது சின்னத்திரை என்று பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில், இவர் நேற்று(செப்,.9)சென்னையில் திடீரென மாரடைப்பு காரணமாக காலையில் உயிரிழந்தார். இவரது மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகபெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக, அவர் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் தானே காரினை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அழிக்கும் முன்னரே அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில், தற்போது மாரிமுத்துவின் கடைசி நிமிட சிசிடிவி வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.