இயக்குனர் ஷங்கருக்கு PANERAI வாட்சை பரிசளித்த கமல்
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கருடன் இணைந்து உருவாகி வரும் திரைப்படம், 'இந்தியன்-2'. முதல் பாகம் பிரமாண்ட வெற்றியடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில், காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சித்தார்த் என ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இவர்களோடு, முக்கிய வில்லனாக S.J.சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக, ஜப்பான், அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பல ஊர்களுக்கு படக்குழு சென்றது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது கமல்ஹாசன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர்" என பாராட்டி, அவருக்கு PANERAI என்ற விலையுயர்ந்த வாட்சை பரிசளித்தார்.