Page Loader
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2024
05:39 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு டிசம்பரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் தக் லைஃப் படம் அறிவிக்கப்பட்டது. நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ள இரண்டாவது கூட்டணி என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படம் ஒரு காவிய கால ஆக்‌ஷன் டிராமாவாக தயாராகி வருகிறது மற்றும் 2025 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கமல்ஹாசனுடன் சிம்பு, மணிரத்னம் மற்றும் சுஹாசினி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் த்ரிஷா, சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் புகைப்படம்

ஓடிடி ஒப்பந்தம்

தக் லைஃப் டிஜிட்டல் உரிமை ₹149.7 கோடிக்கு விற்பனை

டெக்கான் ஹெரால்டின் கூற்றுப்படி, தக் லைஃப்பின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ₹149.7 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது. ₹100 கோடி சம்பாதித்த சூர்யாவின் கங்குவா மற்றும் ₹95 கோடியைப் பெற்ற அஜித்தின் குட் பேட் அக்லி போன்ற முந்தைய டிஜிட்டல் உரிமை ஒப்பந்தங்களை இது முறியடித்துள்ளது. விஜய்யின் சமீபத்திய வெற்றியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், ₹100 கோடி வசூலித்தது கூட, தக் லைஃப் உடன் ஒப்பிடும்போது குறைவான தொகையேயாகும். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.