Page Loader
'ஒளியை கொடையளித்த டேனியல் பாலாஜி': கமல்ஹாசன் இரங்கல் 

'ஒளியை கொடையளித்த டேனியல் பாலாஜி': கமல்ஹாசன் இரங்கல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 30, 2024
04:05 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு காலமான பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்று வருகின்றன.து. இந்நிலையில், ட்விட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், "தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி." என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கமல்ஹாசன் இரங்கல்