
கண்ணீருடன் நடிகர் துல்கர் சல்மான்; காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகர் துல்கர் சல்மான் நேற்று இரவு, தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.
அதில், "கடந்த சில நாட்களாக நான் சரியாக தூங்க முடியவில்லை. நான் முதல்முறையாக ஒன்றை அனுபவிக்கிறேன். நடக்கும் விஷயங்கள் ஏதும் முன்பு போல இல்லை. அதை கடந்து செல்ல முடியாத மனநிலைக்கு வந்துவிட்டேன். இதுபற்றி இன்னும் சொல்ல விரும்புகிறேன், ஆனால் அதற்கு எனக்கு அனுமதி உண்டா என்று தெரியவில்லை." என்று பதிவிட்டு இருந்தார்.
இருப்பினும், அந்த பதிவு போட்ட சில மணிநேரத்தில், அதை நீக்கிவிட்டார்.
துல்கர் சல்மானின் இந்த செயல், அவரின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் 'கிங் ஆஃப் கோத்தா' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கான வேலையா எனவும் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
கலக்கம் தரும் துல்கரின் பதிவு
What happened to #DulquerSalmaan 🥺🥺. He posted and deleted it later. Is everything alright to him ?. #KingOfKotha pic.twitter.com/PyGnrwnorw
— DON BOY (@preethamtweets_) July 2, 2023