LOADING...
அரசியலில் குதித்த ராகவா லாரன்ஸ்! தவெக சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியா?
அரசியலில் குதித்த ராகவா லாரன்ஸ்

அரசியலில் குதித்த ராகவா லாரன்ஸ்! தவெக சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2026
10:00 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள இத்தொகுதியின் இடைத்தேர்தலில், தவெக சார்பில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவி வந்த அரசியல் யூகங்களுக்கு அவரே இன்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் அரசியலில் ஈடுபட எண்ணம் இருப்பதாகவும், இருப்பினும், ரசிகர்கள் கருத்தை பொறுத்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தற்போது ஆட்சியமைத்துள்ள விஜய்க்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிவிப்பு

பாரதிராஜாவின் மறைவால் தள்ளிப்போன அறிவிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த தனது முடிவை ஜூன் 11-ஆம் தேதி அறிவிப்பதாக ராகவா லாரன்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தார். எனினும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் திடீர் மறைவு காரணமாகத் தனது அறிவிப்பை ஒரு நாள் ஒத்திவைப்பதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார். திரைத்துறையின் மீதுள்ள மரியாதையினாலும், தனிப்பட்ட துயரத்தினாலும் இந்த முடிவை எடுத்த அவர், இன்று (ஜூன் 12) வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்குத் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

Advertisement

அரசியல் வருகை

அரசியல் வருகையை உறுதி செய்த எக்ஸ் பதிவு

இன்று காலை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, அவர் அரசியலில் நுழைவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. "நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. பணம் சம்பாதிக்கும் நோக்கமோ அல்லது பதவியைத் தேடும் எண்ணமோ எனக்குக் கிடையாது. நான் நம்பும், எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து தனிநபராகச் செய்வதை விட இன்னும் பெரிய அளவில் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. ஆனால், இன்றைய சூழ்நிலை என்னை அரசியலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

வீடியோ

வீடியோ பதிவு வெளியிட்ட லாரன்ஸ்

இன்று காலை 10:00 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோ பதிவில், தனக்கு அரசியல் மீதான புரிதல் எவ்வாறு ஏற்பட்டது, தனது தாயாரின் அரசியல் பார்வை என்ன, மற்றும் தனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றிய சில முக்கியச் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து முழு வெளிப்படைத்தன்மையுடன் பேசியுள்ளார். "எதிர்பார்ப்பு ஏதுமின்றி உங்களது கடமையை நேர்மையாகச் செய்யுங்கள்" என்ற பகவத் கீதை வாசகத்துடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள லாரன்ஸ், தனது இந்த முக்கிய முடிவுக்கு ரசிகர்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் தேவை என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement