சிகிச்சைக்கு பின் ஆளே மாறிப்போன பாலா - வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் தம்பியாக நடித்திருந்தவர் தான் பாலா. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நாளை கொண்டாடி இருந்த பாலா, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், முதல் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அருகில் மனைவி எலிசபெத்தும் சிரித்தப்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் பூரண குணமடைந்து வர வேண்டும் என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.