
நடிகர் பாலாவிற்கு அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் 'சிறுத்தை' சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவிற்கு, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
அதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யபோவதாகவும், அந்த அறுவை சிகிச்சையில், தனக்கு மரணம் கூட நேரலாம் எனவும், தனக்காக அனைவரும் பிரதித்துக்கொள்ள வேண்டுவதாக, சில நாட்களுக்கு முன்னர் பாலா பேசும் வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில் பாலா நலமுடன் இருப்பதாக மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் பாலா, தமிழில், 'அன்பு' என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்தார். அதன் பின்னர் மலையாள படவுலகிற்கு சென்று விட்டார். இருப்பினும், அவரது அண்ணன் சிவாவின் தமிழ் படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
பாலாவின் அறுவை சிகிச்சை வெற்றி!
நடிகர் பாலாவுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது #Actorbala #Directorsiva https://t.co/VTKXg9nZBJ pic.twitter.com/ITHAJBqWZh
— Dinamalar Cinema (@dinamalarcinema) April 7, 2023