'உலகிலேயே அழகான பெண்ணுடன் நான்': கீர்த்தி பாண்டியனுடன் அசோக் செல்வன்
சென்ற வாரம் கோலிவுட்டின் இளம்-ஜோடியான அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், 'தும்பா', 'அன்பிற்கினியாள்' போன்ற படங்களில் நடித்தவர். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடிக்கும் போது, சகநடிகரான அசோக் செல்வனை காதலித்தார். இருவீட்டார் சம்மதத்துடன், அருண் பாண்டியனின் தோட்ட வீட்டில் நடைபெற்ற இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் வைரலாகி வந்தது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு, முதன்முறையாக அசோக் செல்வன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகான நீலநிற உடையில், வான்வெளி பின்னணியில், இருவரும் சிரித்தபடி நிற்கும் ஒரு கேண்டிட் புகைப்படத்தை பகிர்ந்து, "உலகிலேயே அழகான பெண்ணுடன் நான்' எனும் கேப்ஷனிட்டு பதிவேற்றியுள்ளார் அசோக் செல்வன்.