LOADING...
நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!
இந்த செய்தி புதன்கிழமை (அக்டோபர் 1) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது

நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 01, 2025
06:13 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ், தனது காதலி நயனிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி புதன்கிழமை (அக்டோபர் 1) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அல்லு சிரிஷின் தாத்தாவும், பழம்பெரும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அல்லு ராமலிங்கையாவின் பிறந்தநாளான இன்று இந்த செய்தியை அவர் அறிவித்தார். இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் அக்டோபர் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் சிரிஷ் தமிழில் 'கெளரவம்' என்ற படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்

விவரங்கள்

இன்ஸ்டாகிராமில் செய்தியை அறிவித்த சிரிஷ்

இன்ஸ்டாகிராமில், சிரிஷ் பாரிஸில் நயனிகாவின் கையைப் பிடித்து கொண்டு, பின்னணியில் ஈபிள் கோபுரத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன், "இன்று என் தாத்தா அல்லு ராமலிங்கய்யா காருவின் பிறந்தநாளில், என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றைப் பகிர்ந்து கொள்வதில் நான் பாக்கியவானாக உணர்கிறேன் - அக்டோபர் 31 ஆம் தேதி நான் நயனிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறேன்" என்று கேப்ஷன் எழுதப்பட்டிருந்தது. அவரது மறைந்த பாட்டி அல்லு கனகரத்தினம் எப்போதும் அவரின் திருமணத்தை நடத்தி பார்க்க விரும்பியதையும் அவர் கூறினார். அல்லு கனகரத்தினம் ஆகஸ்ட் மாதம் 94 வயதில் காலமானார்.