
#AjithKumarPhotography: படப்பிடிப்பு தளத்தில் புகைப்பட கலைஞர் அவதாரம் எடுத்த அஜித்
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித், 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் நகரில் உள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில், மீண்டும் அஜித்துடன் திரிஷா மற்றும் அர்ஜுன் இணைகின்றனர். 'மங்காத்தா' படத்திற்கு பிறகு, மூவரும் இப்படத்தில் இணைவதால், படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், நேற்று நடிகை ரெஜினா வெளியிட்டிருந்த புகைப்படத்தின்படி, அவரும் இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படி பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ள படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை, அஜித் தன்னுடைய கேமராவில் படம்பிடித்துள்ளார்.
அதை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித்தின் புகைப்பட திறமை பலரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#LycaProductions #EffortsNeverFail
— Suresh Chandra (@SureshChandraa) December 15, 2023