தரையில் படுத்து உறங்கும் அஜித் குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்த அஜித் குமார் தற்போது உலகமே கொண்டாடும் நடிகராக உருவாகியுள்ளார். எப்பொழுதும் தன்னை எளிமையாக காட்டிக்கொள்வதாலேயே அஜித் குமாருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் அஜித்தின் 62வது படத்தின் டைட்டில் விடாமுயற்சி முயற்சி என வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, அஜித் பயணம் செய்துவிட்டு தரையில் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ஷேர் செய்த ரசிகர்கள் வலிமையின் எளிமை என புகழ்ந்து வருகின்றனர்.