அயோத்தி ராமர் கோவிலில் பூமி பூஜையுடன் தொடங்கிய அர்ஜுனின் 175-வது படம்: ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில் பிரம்மாண்ட கதை
செய்தி முன்னோட்டம்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்து இயக்கும் அவரது 175-வது திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் நவம்பர் 27-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை விழா அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த விழாவில் அர்ஜுன் தனது மனைவி நிவேதிதா அர்ஜுன் மற்றும் படக்குழுவினருடன் கலந்துகொண்டார்.
9 மொழிகளில் ரிலீஸ்
'ஆபரேஷன் சிந்தூர்' பின்னணியில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி எழுதிய கதை
நாட்டுப்பற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் பிரம்மாண்டமான போர் திரைப்படத்திற்கு, ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பர்கவன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக இப்படம் உருவாக்கப்படுகிறது.
பிரசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் சார்பில் அனூப் மோகன் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள நிலையில், 9 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக 2027 சுதந்திர தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.