Page Loader
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா யூட்யூப் சேனல் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்
தாத்தா அமிதாப், தாய் ஐஸ்வர்யா உடன் ஆராத்யா

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா யூட்யூப் சேனல் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2023
09:27 am

செய்தி முன்னோட்டம்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தியும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், ஒரு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் மீது வழக்கு தொடுத்துள்ளார். பிரபல ஊடக செய்தியின்படி, ஆராத்யா பச்சன், தான் மைனர் என்பதால், தன்னைப் பற்றி ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்குத் தடை கோரியுள்ளார். இது தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. ஊடக துறையினர், அவ்வப்போது, ஆராத்யா பற்றி செய்திகள் வெளியிடுவதுண்டு. பல நேரங்களில் அவரின் தாய் ஐஸ்வர்யாவுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்யப்படுவதும் உண்டு. இதற்காக சில நேரங்களில், ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனும், ஊடக செய்திகளை சாடியுள்ளார். இருப்பினும், ஆராத்யா, தானே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவது இதுவே முதன்முறை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post